செயலலிதாவின் சிந்தனைக்குச் சில.......
Tamil Chinthanaiyalar Peravai
இன்று சப்பான், செர்மனி, ரசியா போன்ற வல்லரசுகளே அணுஉலைகள் வேண்டாம் என்று முடிவெடுத்துள்ள நிலையில், புகுசிமா விபத்துக்குப் பிறகும், தமிழகத்தில் அணுஉலையைத் திறந்தே தீர்வோம் என்று காங்கிரசு அரசு அடம்பிடிப்பதும் அதற்கு இசைவாக தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதும் கடுமையாக விமர்சிக்கப்படவேண்டிய விடயங்கள்.
இடிந்தகரை மக்களின் விருப்பத்திற்கு மாறாக அணுஉலையைத் தொடங்குவது ஒரு மக்கள் விரோத செயல்பாடாகும். இது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டிய செயல்.
தமிழக மக்களை அரசுகள் ஏமாற்ற நினைத்தால், உண்மைகள் வெளிவரும்போது அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதனை ஆளும் வர்க்கம் உணரவேண்டும்.
காற்றாலையோ, நிலக்கரிச் சுரங்கமோ இல்லாத கர்நாடகம் போன்ற மாநிலத்தில் இல்லாத 8 மணிநேர மின்வெட்டு தமிழகத்தில் மட்டும் ஏன் ஏற்பட்டது என்ற கேள்விக்கு தமிழக அரசு முறையான விளக்கம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.
மக்களை ஏமாற்ற முனைந்தால், இறுதியாக ஏமாறுவது ஆளும் வர்க்கமாகத்தான் இருக்கும் என்று நினைவூட்டுகிறோம். ... https://www.youtube.com/watch?v=aQzm6kL_s2c
11060779 Bytes